........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 303

கவிதைத் துளிகள்

 

கோலம்

ஈரமேடையில்
விரல்களின்
நாட்டியச் சுவடுகள்.

தேன்கூடு

மரங்களுக்கு
தேனீக்கள் தந்த
குறுந்தாடி

எருமைகள்

எமனுக்கும்
எம் கிராமத்துக் குருவிகளுக்கும்
இந்த கருப்பு ரதம்

நெற்றி

பிறை நிலா
ஞாபகமூட்டுகிறது
அவள் நெற்றியை

மேகங்கள்

வானப் பெண்ணின்
கண்ணீர்த் தேக்கம்?

-கி.சார்லஸ், காரப்பிடாகை.
 

 

 

 

 

 

m

 

கி.சார்லஸ் அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.