........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 329

இறப்பதில் பெருமை!

 

பிறந்த மனிதன் இறப்பதில்தான் பெருமை - இதைப்
பெருமையாகச் சொல்வதிலும் பெருமை.

உருண்டோடு உழைத்தப் பின்பு
உடல் தளர்ந்து போனப் பின்பு - இங்கு
இருந்து இடம் அடைப்பதில் என்ன பெருமை? - வாழ்வில்
இயற்கை நெறி ஏற்பதில்தான் மகிமை.

கோடி கோடியாய் மனிதன்
கொஞ்ச நாளு ஆடினாலும் - இங்கிருந்து
கொண்டுப் போன பொருள் என்ன சொல்லு? - வாழ்வை
கொச்சைப் படுத்தும் காயத்தைத் தள்ளு.

ஆட்டி ஆடி வாழ்ந்து கொண்டாய்
ஆணவத்தில் இன்பம் கண்டாய் - உன்னால்
ஆனதென்ன நாட்டுக்குத்தான் சொல்லு - இனி
ஆக்கப்பூர்வ காயத்தில் நாட்டம் கொள்ளு.

மனிதன் மனிதன் புரிந்து கொண்டால்
மனம் திறந்துப் பேசிக் கொண்டால் - வாழ்வில்
மகிழ்ச்சிக்கோர் எல்லை உண்டோ சொல்லு - இதை
மதியாதவன் வாழ்க்கைக் கதையைத் தள்ளு.

அன்பு பண்பு அனைத்தும் கொண்டு
அமைதி நிலை மனதில் கொண்டு - பிறர்
ஆதக்க வாழ்ந்து காட்டிக் கொள்ளு - இது
அவசியம்தான் அனைவருக்கும் சொல்லு.

இயற்கைவழி வாழ்ந்துக் காட்டி
இளைஞர் வாழ இடம் அளித்து - வாழ்ந்து
இறப்பதில்தான் பெருமை என்று சொல்லு - வாழ்வில்
எடுத்துக்காட்டாய் நீ நடந்து கொள்ளு.

-பொன்பரப்பியான். 

 

 

 

 

 

m

 

பொன்பரப்பியான் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.