........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 331

ஒற்றைக்கால் கொக்குகள்....!

 

சீமையில் வேலை...!
சீர்வரிசை வேண்டாமென
சித்தாந்தம் பேசி
சின்னதாய் ஒரு விளம்பரம்...

அடி ஆத்தே... பாத்தியா...
சீமையிலே வேலையாம்!
கைநிறைய சம்பளமாம்!
பாக்க லட்சணமாம்!
பணம் காசு வேண்டாமாம்!!

பாத்துக்கடி கூத்த...
எப்படி ஏமாத்துறானுக பாரு...
அங்கே எவகூட குடித்தனமோ?
வெள்ளைக்காரியோ? கருப்பியோ?

மாப்பிள்ளை... அவன்
கூனோ? குருடோ?
செவிடோ? ஊமையோ?
என்ன வியாதியோ? எழவு...
ஒன்னும் தெரியல...!

காணாது குறை கண்டு
கேளாது குற்றம் சுமத்தி
ஒதுக்கியது உலகம்...!

தவறு திருத்தப்பட்டது...
சீமையில் வேலை
பணத்துடன் பெண் தேவை...!

படபடவென்று
பட்டாளமாய்
பறந்து வந்தன
பச்சைக் கிளிகள் பல
பணத்துடன்...

அக்கா... கேட்டியா...?
டிவி பொட்டியில
என்னமா பேசினாக
வரதட்சணை பத்தி...!

ஆனாலும்...
காத்திருக்கின்றன... அந்த
ஒற்றைக்கால் கொக்குகள்...!

--பாளை சுசி. 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.