........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 337

மகாத்மாவின் மகத்துவம்.

 

சட்டையைக் கழட்டிவிட்டு
சகாப்தத்தை மாட்டிக் கொண்டவன் நீ.
அகிம்சையைக் கையிலெடுத்து - மற்ற
ஆயுதங்களின் கூர்மையைக்
கேள்விக்குறியாக்கியவன் -நீ
கைகாட்டிய திசையிலெல்லாம்
கால்கடுக்க நடந்தவர்கள் ஏராளம்.
சட்டம் என்கிற சாக்கடையினால்,
திட்டமிட்ட குற்றவாளியாகி
நீதிமன்றம் வந்தபோது,
ஒட்டுமொத்த மன்றத்தையே எழவைத்த,
மாண்பினை மகத்துவமாய்ப் பெற்றவன்.
நோபல் பரிசு உன்கைகளில் தவழும்
நிறைவினை அடையவில்லை - இன்றோ
நிகழ்வாய், மிக நெகிழ்வாய்,
வன்முறைக்கெதிரான
உலக தினமாக
உன் பிறந்த நாள்
உருமாறிய போது - உன்
மனதுக்குள் இருந்து சிறந்த
மகத்துவம் இன்னும் வெளிச்சமாகிறது!!!

-சித.அருணாசலம், சிங்கப்பூர்.

 

 

 

 

 

m

 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.