........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 354

ஏமாற்றுக்காரன்!

தொட்டுவிடும் தூரம்தான்
வானம் என்பான் - அவன்
தொடமாட்டான் - பிறரைத்
தொடச் சொல்லுவான்..!

ஏறிவிடும் தூரம்தான்
இமயம் என்பான் - அவன்
ஏறமாட்டான் - பிறரை
ஏறச் சொல்லுவான்..!

நீந்திவிடும் தூரம்தான்
ஆழ்கடல் என்பான் - அவன்
நீந்தமாட்டான் - பிறரை
நீந்தச் சொல்லுவான்..!

உபதேசங்கள் பிறர்க்கு - இதை
உணர்ந்தவன் போதகன் - இவன்
சொல்லுவான் வழி
மோட்சத்திற்கு!
எப்படி?
மணலைக் கயிறாக்கி
நீரைச் சங்கிலியாக்கி
காற்றை கம்பியாக்கி
வார்த்தை ஜாலம் செய்து
கண்களை மூடச் சொல்லி
காட்டிவிடுவான்
கடவுளை...
அதன்பின்பு
அவன்தான்
அந்தக் கடவுள் என்றும்
அசத்தலாய்க் கூறிடுவான்..!

ஏமாற்றுவது ஒரு கலை
ஏமாறுவதில் ஒரு சுகம்..!

-பாளை.சுசி.
 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.