........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 366

என்னவள் ஒரு தேவதை...!

அன்றொரு நாள் ஒரு
முன்னணி நடிகனைப்
பிடிக்கும் என்றாய்...
அன்றிலிருந்து எனக்கு அவனை
பிடிக்காமல் போய்விட்டது...

----------------

நீ பறக்கும் முத்தம்
கொடுக்காதே...
காற்று அதைப் பல‌
பிரதிகள் எடுக்கிறது போலும்...
நீ முத்தம் கொடுத்தபின்
வீசும் காற்று மிக‌
இனிமையாக இருக்கிறதே...

----------------

நீ உன் நெற்றியில்
ஒரு கருப்பு பொட்டு
வைக்கையில்தான் கவனித்தேன்...
'இந்த சூரியன்
கருப்பாய் இருக்கிறதே'...

----------------

நிலாவில் தெரிகிறது
ஒரு கருப்புச் சூரியனும்,
ஒரு மின்னும் நட்சத்திரமும்...
முழிக்காதே,
உன் நெற்றிப்பொட்டையும்
மூக்குத்தியையும் தான் சொல்கிறேன்...

----------------

ரோஜாப்பூ ஒன்றைப் பறித்து
காதோரம் செருகிக்கொள்கிறாய்...
தனக்குமுன் உன் கூந்தலை
ஆக்கிரமித்துவிட்ட பூ என்று
பொறாமை கொள்கிறது
அந்த ரோஜாப்பூ
உன் காதின் மேல்...

----------------

பூக்களெல்லாம் வாசம்
வீசுகின்றன...
எந்த பூவாவது
பேசியதுண்டா...
உன்னைப்போல்...!

-ராம்ப்ரசாத்.
 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.