........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 367

கதவொன்று திறக்கிறது...!

கதவொன்று திறக்கிறது
கனவொன்று நிகழ்கிறது
மறைகின்ற வருடத்தில்
புலர்கின்ற புதுயுகமே

நாளைய வருடத்தின்
இன்றைய நிச்சயம்
நேற்றோடு போகட்டும்
காற்றான துயரங்கள்

உழைப்பவரின் கைகள்
உயர்ந்திங்கு ஓங்கட்டும்
அழுது நின்ற முகங்களில்
ஆனந்தம் பொங்கட்டும்

பொய்யான பொழுதுகள்
போயேதான் போகட்டும்
மெய்யான நினைவுகள்
மேதினியில் மிஞ்சட்டும்

வஞ்சகங்கள் புதையவும்
துரோகங்கள் ஒழியவும்
உண்மையெனும் மொழி
உலகெங்கும் செழிக்கட்டும்

சொல்லாத சொற்கள்
கல்லாத பாடங்கள்
பொல்லாத வேளைகள்
நில்லாமல் விலகட்டும்

இரண்டாயிரத்து ஒன்பது
இருளாகி மறையுது
இரண்டாயிரத்துப் பத்து
இளங்காலையாய் புலருது

நெஞ்சத்தில் துணிவோடு
நேரத்தின் துணையோடு
முன்னேறும் வகை கண்டு
முன்னோக்கிச் செல்லுங்கள்

விழுந்த இடத்தில்
விதையாகி முளையுங்கள்
வீரத்தின் அங்கமாய்
விவேகத்தைக் கொள்ளுங்கள்

வரும் இந்த வருடம்
விழிநீரைத் துடைத்திங்கு
வாழ்க்கையில் மகிழ்ச்சி தர
மும்மாரி வாழ்த்துக்கள் !

-சக்தி சக்திதாசன், லண்டன்.
 

 

 

 

 

 

m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.