........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:37

தூக்கம்

தூக்கம் மனிதனைத் தொடரும் சரித்திரம்!
சீக்கெனும் களைப்பைத் தீர்க்கும் மந்திரம்!

மூக்கிலே குறட்டையை முழக்கும் கோட்டை!
ஊக்கம் தந்திடும் உயர்ந்த வேட்டை!

உயிரோட் டத்தின் ஓய்வு மண்டலம்!
மயிர்க்கூச் செறியும் மாய அண்டம்!

இமைக ளிரண்டும் இணைந்துதன் - காமச்
சுவையைக் குறைக்கும் சுகமான காலம்!

உறக்கத்தை நாம் உணராத போது
பெறுகின்ற சுகம் பெருங்கொடை யல்லவா?

விழிகளை மூடும் விழாச்சுகம் -திறப்பு
விழாவின் போது வினோதமா யிருக்கும்!

ஏற்றத் தாழ்வை இன பேதமற்று
ஏற்றுக் கொள்ளும் ஏகாந்த வனம்!

தர்மவானுக்கும் தரித்திரனுக்கும்
குற்றமற்றவர்க்கும் கொடுந்தன்மையோர்க்கும்

சமத்துவம் வழங்கும் சம தர்மபூமி!
எமலோகத்தின் எச்சரிக்கை!

இருட்டுக் கடலில் எந்திர மனிதனாய்ப்
பறந்து திரிவோம் பாடமோ பலரகம்!

காணாததெல்லாம் கனவு விழிக்குத்
தானாக வந்து தரிசனமாகும்!

சுகத்தை அந்தச் சூனியக் காடு
அகத்தில் வைத்து அழுத்தியிருக்கிறது!

எந்த உயிரும் இந்த மந்திர
விந்தையுள் மயங்கவே வேண்டும் விதியிது!

தூக்கமென்ற தூக்குக் கயிறில்
கோக்காத் தலைகள் குவலயத்திலில்லை!

உறக்கமே உன்னிடம் ஒன்றுநான் கேட்கிறேன்!
சுருக்கமாய் என்னிடம் தொடர்பு வைத்துக் கொள்!

-கவிஞர்.வி.எஸ்.வெற்றிவேல்.

 

 

 

m

 

வி.எஸ்.வெற்றிவேல் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.