........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 392

குறுங்கவிதைகள்

இயேசு

கி.பி
கி.மு... வைத்
தந்த ... கீ (Key)

________________________

காவி
"மன்மதன்"களின்
மாற்றுத்துணி?

________________________
தங்கம்
தங்கத்தின் விலை ஏறியதால்
தங்கத்திற்கு "தாலி" ஏறவில்லை!

________________________

குடி "குடியைக்" காக்கும்
கடலை மேகம் குடித்தது...
கரையில் பயிர்கள் செழித்தது
ஓ.... குடி.. குடியைக் காத்தது!!

________________________

பவர்கட்
மின் கட்டணம் பாக்கி
வானத்தில் "பவர்கட்"
அமாவாசை!

________________________

இயேசு
நிலுவையில் உள்ள பாவங்களைச்
சிலுவையில்' சுமந்த (சுமக்கும்)
செம்மல்!

-முனைவர். தியாகராஜன், சிங்கப்பூர்.

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.