........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 407

கதை கேளு...!கதை கேளு...!!

‌விதைப்பவன் ஒருவன்
வீதி வழி சென்றான்..
காண்பவர்களிடம்
கண்டதாய்
கதை ஒன்றை
தெளித்துச் சென்றான்..!
தீ பற்றிய பஞ்சாய்
திக்கெட்டும் பரவியது..
தின்பதற்கு அவல் கிடைத்ததால்
திண்ணைதோறும் அதே பேச்சு..
திரும்பிய இடமெல்லாம்
திகட்டாமல் பேசினார்கள்..
நடக்காத கதைக்கு நாடக அந்தஸ்த்து வேறு..
நடித்தும் காட்டினார்கள்;..
கதை சொல்லிச் சொல்லி,
அலுப்புத் தட்டவில்லை..
கேட்கக் கேட்க, கதைக்கு கிளைகள் தோன்றின..!
காக்கை வெள்ளை கதையாய்
காணாதவர் எல்லாம்
தாங்கள் கண்டதாய்
கண்டபடி பேசிக் கொண்டார்கள்..!
கடவுள் மட்டும்
கதை பேசவில்லை..
ஏன் தெரியுமா?!
கடவுளிடம் யாரும்
கதை சொல்லவில்லை..!!

-பாளை.சுசி.

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.