........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 409

ஒற்றைப் பார்வை!

‌மாலை நேரத்து மஞ்சள்
வெயிலில் மணம் மிக்க!
மல்லிகையின் வாசம்!
திரும்பிய திசையில்
வாசத்தின் பின்னால்-நான்.
மணம் வீசிய வண்ண
மலரை காண வந்த
கண்களுக்கு ஆச்சரியத்தில்
அற்புதம் ஒரு -பூ
மற்றொரு மலரை அலங்கரிக்க!
தேடிய கண்களுக்கு தெவிட்டாத
இன்பமாய் தேனிலவு
தென்றலென வீசியது -அவளின்
ஒற்றைப்பார்வை...
வீசியப்பார்வை வேலியாய்
அமைந்த -இரயில் பெட்டிக்குள்!
சட்டென ஒலித்த மணியால்
விருந்தளிக்க வந்தவள்
வீதியில் ஆளாகி சென்றாள்!
இந்த ஒற்றைப் பார்வை
போதுமே! என் உயிர்
உன்னை சுற்றி வர
பிரிவோம் சந்திப்போம்...!

-மு.சந்திரசேகர், இராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

மு.சந்திரசேகர் அவர்களின் மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.