........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 419

அகமும் புறமும் அழகு!

‌இறந்த செல்களைப் புதுப்பித்து
வலி பொறுத்து
தேவையற்ற முடிகளை நீக்கி
கதிரியக்க சிகிச்சை செய்து
தோல் வழவழப்பாக்கி
சில வகை திரவியங்களை
தோலில் பூசி மினுமினுப்பாக்கி
சில பானங்களைப் பருகி
பழங்களை உண்டு
அவ்வளவுதான் முடிந்துவிட்டது
புறத்தில் அழகுபடுத்த வேண்டியவை

தேவையற்ற பேச்சுகளைக் குறைத்து
நேரத்தை ஒழுங்காக நெறிப்படுத்தி
சில புத்தகங்கள்
இயற்கையோடு இயைந்த வாழ்வு
அகத்தில் அழகைக் கூட்ட
இவற்றுடன் நீக்கமற நீயும்...

-இவள் பாரதி.

 

 

 

 

 

m

 

இவள் பாரதி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.