........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:43

கோபம் !

அமைதியைக் கெடுத்து நல்லறிவையும் கெடுக்கும்
ஆபாச முலாம் - மனிதனை
அழிக்கும் ஆலம்!

சுமைக் கோபத்தைத் தூக்கியவர்கள்
இறக்குதல் கடினம் - நெஞ்சில்
ஈரமும் மடியும்!

சினத்தை மறுக்கும் தவத்தைப் பெற்றவன்
செகத்தை ஆளலாம் - கொடிய
தீங்கையும் வெல்லலாம்!

இனிக்கும் அகத்தையும் எழில் முகத்தையும்
எரிக்கும் நெருப்பு - வலிமை
இருக்கும் துருப்பு!

நெருப்புப் பிடித்து நிலத்தின் பொருட்களை
எரிப்பதும் ஒன்று - கோபம்
பிடிப்பதும் ஒன்று!

கொட்டும் அருவிக் குணமிருப்பினும்
கொதிக்கும் புனலே - ஆக்கும்
கோபக் கனலே!

தன்னைப் பழித்துச் சண்டையிட்டாலும்
சினம் கூடாது - அதனால்
திறம் குறையாது!

விசுவாசமித்திரன் கோபத்தினால்தான்
வரமும் தொலைந்தது - வசிட்டரின்
வசவும் கிடைத்தது!

துரியோதனின் கோபமவனை
தொலைத்ததோடில்லை - அரசும்
சொந்தமும் தொலைந்தது!

எத்தனை இராச்சியம் இருப்பினும் கோபம்
இருந்தால் போதும் - எல்லாம்
இல்லாது போகும்!

அன்பை மக்களாட்சி யென்றால்
கோபத்தை நாம் கொடுங்கோல்
ஆட்சி யெனலாம்!

இன்னல் கொடுக்கும் இந்நோய்ச் சினத்தை
எட்டி உதைப்போம் - திக்கெட்
டுக்கு முரைப்போம்!

-கவிஞர்.வி.எஸ்.வெற்றிவேல்.

 

 

m

 

வி.எஸ்.வெற்றிவேல் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.