........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 433

பாசப் பிரிவு..!

‌உள்வாங்கிய
உயிர் மூச்சை
உறைப் பைக்குள்
ஊதி அடைத்து
தலையணை செய்து
தலை அதில் சாய்த்து
உடலை நீட்டி
விளக்கை அணைத்து
கண்களை மூடி
தழுவிச் செல்லும்
குளிர் காற்றுக்கும்
தாளத்தோடு இசைக்கும்
தாலாட்டுக்கும்
தூக்கம் வராமல்
துயர் படும்
நெஞ்சுக்குத் தெரியும்
பிரிந்து வந்த
பேரக் குழந்தையின்
ஞாபகங்களோடு
ரயில் பயணம்..!

-பாளை. சுசி.

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.