........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 434

வெப்பமடைதலைத் தடுத்திடுவோம்!

‌காந்தியத்தைக் கடைப்பிடித்தால் நலம் பயக்கும்
கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும்

மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்திட வேண்டும்
மனித ஆற்றலைப் பெருமளவு பயன்படுத்திட வேண்டும்

எரிபொருள் சிக்கனம் என்றைக்கும் வேண்டும்
எண்ணெய் வளம் வருங்காலத்திற்கும் வேண்டும்

மரம் வெட்டுதல் தடை செய்திட வேண்டும்
மரம் வளர்த்தல் கடமையாக்கிட வேண்டும்

சுற்றுச்சூழல் மாசு இன்றி காத்திட வேண்டும்
சுகாதாரமான காற்றைச் சுவாசித்திட வேண்டும்

இயற்கையை இயற்கையாக இருக்க விட வேண்டும்
இயற்கையை இல்லாமலாக்குவதை நிறுத்திட வேண்டும்

செயற்கையை முடிந்தளவு அகற்றிட வேண்டும்
செயல்கள் மனிதனால் நடந்திட வேண்டும்

விவசாய உற்பத்தியைப் பெருக்கிட வேண்டும்
விசம் கக்கும் தொழில்கள் நிறுத்திட வேண்டும்

இயற்கை உரங்களைப் பயன்படுத்திட வேண்டும்
இரசாயண உரங்களைத் தவிர்த்திட வேண்டும்

உடலுக்கும் உலகிற்கும் நலம் மிதிவண்டி
உலகம் செழிக்கக் குறைப்போம் விசைவண்டி

மகத்தான மனித ஆற்றல் உணர்ந்திடுவோம்
மாசுக் கட்டுப்பாட்டிற்கு உதவிகள் புரிந்திடுவோம்

வெப்பமயமாதலைத் தடுக்க உதவிடுவோம்
வெப்பமாகும் செயல்களை உடன் நிறுத்திடுவோம்

எங்கும் இயந்திரமயமாதலை ஒழித்திட வேண்டும்
எங்கும் மனிதமயமாதலை வளர்த்திட வேண்டும்

நவீனமயமாதல் உடலுக்கு உலகிற்கும் கேடு
நவீனத்தில் நல்லதை எடுத்து அல்லதை விட்டுவிடு

எப்போதும் துணிப்பை ஒன்று வைத்திருப்போம்
எங்கும் பிளாஸ்டிக் பை இல்லாது ஒழித்திடுவோம்

மக்காத குப்பையாகி மாசுபடுத்துகின்றது
மண்ணில் நீரை இறங்க விடாமல் தடுக்கின்றது

பாலித்தீன் பயன்பாட்டை உடன் குறைத்திடுவோம்
பாதிப்பு இல்லா உலகம் நாம் அமைத்திடுவோம்

முயன்றால் முடியாது எதுவுமில்லை உலகில்
முயன்றிடுவோம் யாவருமே வெப்பத்தைக் குறைக்க!

-இரா. இரவி, மதுரை.

 

 

 

 

 

m

 

இரா. இரவிஅவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.