........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 436

என் அருமைத் தமிழ் மொழியே...!

‌என் அருமைத் தமிழ் மொழியே - உன்னை
உயர்த்திடுவேன் இது உன்மேல் ஆணை!
தேன் இனியத் தமிழ் மொழியே
என் உயிர்த் தாய் மொழியே - உலகெங்கும்
உன்னைப் பரப்பிடுவேன் உன் மேல் ஆணை!

பழமையான தமிழ் மொழியே
பாரதத்தின் தனி மொழியே - உனக்காக
உயிர் கொடுப்பேன் உன்மேல் ஆணை!
பட்டிதொட்டியெல்லாம் தமிழ் மணம் பரவச் செய்வோம்
பாமரர் மனதில் தமிழ்ப் புகழ் விளங்கச் செய்வோம்!
பாராளுமன்றத்திலும் உன்னைப் பேச வைப்போம்
பரதேசத்தினரும் உன்னை வணங்கச் செய்வோம்!

தமிழை மதியாதாரை தூரத்தில் தள்ளிடுவோம்
தமிழை இகழ்வாரை முகத்தில் உமிழ்ந்திடுவோம்
கன்னித் தமிழ் மகள் மனதில் அன்புப் பஞ்சமா
கன்னித் தமிழ்நாட்டில் வேலைப் பஞ்சமா
விஞ்ஞானத் தொழில் வளரும் தேயும் அழியும்
இயற்கைத் தொழில் விவசாயம்
மண்காட்டி, வான்காட்டி-மடியில்
பொன்காட்டி மகிழ்ச்சியூட்டும்
மரபுத் தொழிலிதை பேணி வளர்த்திடுவோம்! 

-விஷ்ணுதாசன்.

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.