........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 437

சிங்கை புகழ் பாடு...!

அமிழ்தெனும் தமிழுண்டு
சிங்கை அழகைப் பாடுவோம்!
தேசிய நாளெனும்
திருநாள் கண்டோம்!

வீசிய காற்றெல்லாம்
சுதந்திர விளக்கேற்றினோம்!
ஆடிவரும் கப்பல்
ஆழியெனும் பூமடியில்
அதில்
ஓடிவரும் பொருள்கள்
ஒரு கோடி விதங்கள்!

நாடிவரும் மாந்தர்க்கு
நலமொன்று செய்வோம்!
தேனூறும் மலர்ச்சோலை
தேடிவரும் வண்டினம் போல்
நாடிவரும் மாந்தர்க்கு
நலமொன்றே செய்திடுவோம்!
மனத்தூய்மை
எங்கள் வழித் தூய்மை!
சாலைகளும் தூய்மைச்
சான்றுகளாய் அவை காட்டும்!

வான்முட்டும் மேகங்கள்
வண்ண நிறங்காட்டும்!
மண்முட்டும் கடலழகு
கரை வாழ்ந்திருக்கும் சிங்கை நகர்!

அரசாளும்
லீ என்னும் அமைச்சர்
கோலோச்சும் அழகுண்டு!
அன்னவரைப் புகழா "நா"
அகிலத்திடை இல்லையடா!

-முனைவர் தியாகராஜன், சிங்கப்பூர்.

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.