........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 438

கல்லுக்குள் ஈரம்...!

கண்டுபிடித்தான் சிற்பி
கல்லுக்குள் கடவுளை.! அதைக்
களவாடிய வியாபாரி
காசாக்கினான்.! அந்தக் காசில்
கற்கள் வாங்கிக் கட்டினான்
கண்ணுக்கினிய வீட்டை.!
காசு கொடுத்து
கடவுள் சிலை ஒன்று வாங்கி
கட்டிடத்தில் வைத்து
காலையும் மாலையும்
கண்களை மூடி
கன்னத்தில் போட்டு
கடவுளே காப்பாற்று என்று
கண்ணீர் வடிக்கிறான்.!
கடவுளும்
கண்டும் காணாது
கல்லாய் சிலையாய்
கடவுளாய் இருக்கிறார்..!

-பாளை. சுசி.

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.