........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 451

குறுங்கவிதைகள்

முழு
நிலவு சிதறியது
குளத்து நீரில்
கல் எறிந்தான்
ரசனை இல்லாதவன்!

____________

உடுத்தியிருந்ததை
உருவி
வேறு சேலை
கட்டிவிட்டேன்
வெட்கப்படவே இல்லை
ஜவுளிக்கடை பொம்மை!

_____________

ஆடையின்றி
வெக்கமின்றி
இலையுதிர்கால மரம்!

_____________

தன்
எஜமானியம்மாளின்
இருபது வயது மகளின்
திருமணத்தில்
ஓடி ஓடி
வேலை செய்தாள்
முப்பது வயதிலும்
மணமாகாதவள்!

______________

வேர்களில்
பூக்கள்
ஆல மரத்தடியில்
பேருந்துக்காக
காத்திருக்கும் பெண்கள்!

-பாரதியான்.

 

 

 

 

 

m

 

பாரதியான் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.