........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 452

காத்துக் கொண்டிருக்கும்...!

உயிரே...
இந்த மடலைப்
படிக்கும் பொழுது
எரியும் தணலில்
வெந்து கொண்டிருக்கும்
இதயத்தின் துடிப்பு
உன் வருகைக்காக
மயான வாசலில்
காத்துக் கொண்டிருக்கும்...!

காலங்கள் ஓடினாலும்
பருவங்கள் மாறினாலும்
பார்வையை விட்டுச் சென்றாலும்
கல்லறையின் விழிகள்
உன் வருகைக்காக
கண் இமைக்காமல்
காத்துக் கொண்டிருக்கும்...!

தனிமையின் சுகத்தில்
இரவின் மௌனத்தில்
நினைவுகள் அகன்றாலும்
ஆன்மாவின் உணர்வுகள்
உன் வருகைக்காக
அழிந்து விடாமல்
காத்துக் கொண்டிருக்கும்...!

-சந்தியா கிரிதர், புது தில்லி.

 

 

 

 

 

m

 

சந்தியா கிரிதர் அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.