........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 453

பூப்புனித வாழ்த்து!

கொத்து வைரம் கொட்டியதாய்,
பத்து மலர் மணம் சிந்துவதாய்,
குளிர் நிலா தன்னொளியுடன்
அருவிச் சாரலை அனுபவிப்பதாய்,
பட்டு மலர் மொட்டு விரிந்து
பூப்பெய்தினாள் செல்வி...!

இனியென்ன...?

சுப்பிரபாத விடியல் இளமைக்கு.
ஆனந்தம்! பரமானந்தம்! உறவுகள்
ஆராதிக்கும் இனிய நிகழ்வு.
இறக்கைக்குள் குஞ்சாக செல்வியை
எல்லோரும் பொத்திப் பாதுகாப்பார்.
கண்ணும் மனமும் பரபரக்க
காவல் இளமைக்கு வேலியாக.
ஆவலுடை சுதந்திரம் பறிபோகுமா?

ஆசைதீர சுயகாலில் நிற்கட்டும்!
அருமையான எதிர்காலம் அமையட்டும்!
அன்பான பெற்றோர், செல்வியின்
ஆசைகள் நிறைவேற வல்லமை
அனைத்தும் கிடைக்கட்டும்.
வாழ்த்துகள்!
மனமார்ந்த வாழ்த்துகள்!!

-வேதா இலங்காதிலகம், டென்மார்க்.

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.