........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 454

அம்மாவை மறந்திடாதே...!

உலகில் உறவுகள் ஆயிரம் உண்டு
உன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ?
கருவில் சுமந்த காலம் முதல் நம்மை
கண்ணின் இமையாய் காப்பவள் தாய்
தன் தூக்கம் துறந்து என்றும் குழந்தை
அதன் தூக்கம் காத்து வளர்த்தவள் தாய்
தாலாட்டுப் பாடி தமிழ்மொழி ஊட்டியவள் தாய்
சீராட்டி வளர்த்துச் சிறப்படையச் செய்தவள் தாய்
தன்னலம் மறந்து குழந்தை நலம் பேணுபவள் தாய்
தன்னிகரில்லாத் தியாகத்தின் திரு உருவச் சின்னம் தாய்
பசி மறந்து குழந்தை பசி போக்குபவள் தாய்
ருசி அறிந்து குழந்தை புசிக்கத் தருபவள் தாய்
தன்னைத் தேய்த்து வாசம் தரும் சந்தனம் தாய்
தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகு தாய்
சும்மா வந்து போகும் உறவு அல்ல தாய்
அம்மா நெஞ்சில் பதிந்த கல்வெட்டு உறவு தாய்
உடல் உயிர் உள்ள வரை மறக்க முடியாது தாய்
உணர்வு ஊட்டிய உயர்ந்த உறவு தாய்
பேசாத கல்லை வணங்குவது மூடநம்பிக்கை
பேசும் தாயை வணங்குவது தன்னம்பிக்கை
கண்ணிற்கு புலப்படாத கடவுளை விட
கண்ணாய்க் காத்திடும் தாயை வணங்கு
மனைவியை மதித்திரு தவறில்லை...
அம்மாவை மறந்திடாதே...!

- இரா.இரவி, மதுரை.

 

 

 

 

 

m

 

இரா. இரவிஅவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.