........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 490

வாழ்க்கைப் படியேற...!

இதுவரை தோன்றவில்லை
இன்னொரு வாழ்க்கை?
தன் பசிக்காக உழைத்த
தாயின் அன்பும்
தங்கையின் வாழ்க்கைக்கு
வழிகாட்டத் தவிக்கும்
தந்தையின் உழைப்பும்.
அனைவரும் எதிர்ப்பார்க்கும்
ஒற்றை பலாமரமாய்
அவன்...
பூத்தது ஒரு காயானாலும்
பலன்கள் பற்பல!

வாடிய நெற்கதிர்
கோடைக் காலத்தில்!
ஒரு துளிநீர் கிடைக்க!
தலைதூக்கி நிற்கும்.
மனம்! அலைபாய்ந்த...
பருவம் பறந்தோட
பக்குவமாய் சிந்திக்கும்
பரந்த மனம்...!

உற்றார் உறவினர்
பழிச்சொல்லும்
பகட்டுச்சொல்லும்
நிரம்பி வழிய!
சொந்தக் காலில்
சுகந்திரமாய் வென்று
வெற்றிக்கொடிகளை
வீதியெங்கும் நட்டு
தன் பசி மறந்து
தன் குடும்பம் தலைத்தோங்க
புறப்பட்டுவிட்டான் பட்டதாரி!
வாழ்க்கைப் படியேற...!!

-மு.சந்திரசேகர், இராஜபாளையம்.

 

 

 

 

 

m

 

மு.சந்திரசேகர் அவர்களின் மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.