கவிதை:
520
கண்ணா எனக்குக் கொடு!

கண் கட்டி காட்டிட விட்டது போல்
காமத்தில் கட்டுண்டு காதல் தெளிவற்று இருந்த
என்னைத் தேற்றிய
கண்ணன் அருளிய கீதை!
ஆசையில் இருண்ட மனதை
வாதத்தால் வென்ற கண்ணனே!
பரம்பொருளே!
மனக்கடலில் காம அலைகள் வந் மோம்
கற்பூரம் பருவமல்லவா!
பாற்கடலைக் கடைந்து அமுதம் வேறு
விஷம் வேறாக களைந்தவனே!
மாதவனே, என் மனக்கடல கடந்து
காம, லோப, மோக குரோத, மதமாச்சயம்
என்ற நஞ்சைக் களைந்து பக்தி அமுதத்தைத்
தர மாட்டாயா!
ஊனக்கண்ணால் உலகைக் காண வைத்தவனே
என் ஞானக் கண் திறந்து அருளமாட்டாயா!
யசோதைப் பாசக்கயிற்றால் கட்டிப் போட்டாள்
நான் பக்திக் கயிற்றால் மனதில் கட்டிப் போடுகிறேன்
பார்த்தசாரதியே, பாரிதனில் வாழ பக்குவத்தைத் தாரோயோ
பக்தனுக்கு பக்தனே
இது என் செயல் அன்று! உன் செயல்
நான் எழுதவில்லை, என்னைத் தூண்டியவன் நீதான் தயாபரனே!
என்னை எனக்குக் காட்ட மாட்டாயா!
தேவர்களின் வணக்கத்திற்கு உரியவனே
மூவுலகையும் ஆள்பவனே!
என் செயல், மூச்சு, உணவு, உடை, பொருள்
உனக்கே அர்ப்பணித்தேன்! இந்த
அர்ப்பனை ஆட்கொள்ள வாராயோ
உன்னை அர்ச்சிக்கத் தமிழ் கவிமலர்கள தாராயோ!
கால சக்கரத்தைக் கையில் ஏந்தியவனே
முக்காலமும் உணர்ந்தவனே
எனை உனையன்றி யார் நன்கு
அறிவார் மரா மன்னனே!
பக்தருக்கு நீ எதையும் செய்வாய்
மார்கழி மாதத்திற்கு உரியவனே
உன்னை வணங்குவது அன்றி வேறெதுவும்
அறியாதவனே நான்!
என் மனதை ஒப்படைக்கிறேன்
நான் என்ற அகந்தையை ஒப்படைக்கிறேன்
என் கவலையை ஒப்படைக்கிறேன்
நீதான் எல்லாம் என்பதை எனக்கு உணர்த்திவிடு
உயர்ந்த நின் பாதங்களில் இடம்கொடு
உத்ராயணகாலத்தில் மரணத்தைக் கொடு
பற்றற்ற பார்வை கொடு
மட்டற்ற மகிழ்ச்சி கொடு
சீர்மையான சிந்தையைக் கொடு
நேர்மையான நடத்தையைக் கொடு
புதுமையான கருத்தைக் கொடு
பூவுலகில் அதைப் பரப்பிக் கொடு
இயற்கயான வாழ்வைக் கொடு
வலிமையான மனதைக் கொடு
அதில் உறுதியான உன் பக்தியைக் கொடு
மௌனமான மொழியைக் கொடு
உன்னை அடைய மார்க்கம் கொடு
மார்க்கத்தில் உன் அருளைக் கொடு
-விஷ்ணுதாசன்.
|
|