........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 523

ஈழத்து மாலதி!

எம் விடுதலை போருக்கு
நாங்கள் கொடுத்த கொடை -
எம் மண்ணின் வீரம் வரலாற்றில் நிலைக்க விதைத்த
முதல் தாய்விதை; மாலதி!

பெண்ணின் வீரம் இதுவென்று
சமரில் காட்டிய முதல் பெண்புலி; விடுதலைக்கு
கனவு சுமந்தோர் மத்தியில் - களத்தில் இறங்கி
உயிரை கசக்கியெறிந்த போராளி; மாலதி!

உயிர்போகும் பயத்தை கொண்று
தன் ஆயுதம் காக்க அதிகம் பதைத்தவள்;
மானம் காக்க உயிர்விட்ட தமிழச்சி போல்
மண்ணின் வீரம் சொட்ட உயிர் குடித்தவள்; மாலதி!

சைனைட் குப்பி கீழே சாயும் முன்
உடல் சாய்ந்து மண்ணை முத்தமிட்டவள்;
வல்லுறவு கொண்ட மனிதமிருகத்திடம்
தன் பெண்ணுறவை காக்க சபதமேற்றவள்; மாலதி!

ஆண்பெண் சமநிலை மலர இருபத்தியிரண்டு
ஆண்டுகளுக்கு முன்னரே முழக்கமிட்டவள்;
ஈழக் கனவை இருபாலருக்கும் ஒரு கனவாக்கி
அதற்குத் தன் உயிரையும் உரமாயிட்டவள்; மாலதி!

பெண்கற்பை சூறையாடும் கயவர்களை யொழிக்க
நடு சாமம் நடுத் தெருவில் காவல் காத்தவள்;
எதிரியை சுட்டுப் பொசுக்க ஏந்திய துப்பாக்கியில்
தன் கனவையும் லட்சியத்தையும் ரவையோடு சேர்த்து சுட்டவள்; மாலதி!

கலகலப்பாய் பூக்கும் பூவில் ஒரு பூவாய்
பூத்தவள்; அண்ணன் தங்கை உறவில் - உள்ளத்தை
உயிர்நார் கொண்டு கட்டியவள்; உலகவழக்கு
எல்லாம் மறந்து தன் மனவழக்கின் தீர்ப்பானவள்: மாலதி!

நாட்டுக்கொரு போர் நாளும் நடப்பதை
தன் ஒற்றை நபராய் தடுக்க நினைத்தவள்;
கடைசி மண் காற்றில் பறக்கும் வரை
ஈழத்தின் உயிர்பூவாய் பூப்பவள் மாலதி!!

-வித்யாசாகர்.

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.