........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 525

இன்னொரு காந்தி வருவாரோ...?

உலகின் மிகபெரிய ஜனநாயக நாடாம்!
நம் இந்தியா
பண நாயகம்தான் இங்கே
ஜனநாயகத்தை தீர்மானிக்கிறது!

வியாபாரம் செய்யவந்தவனின் கையில்
அடிமைப்பட்ட தேசம் -இன்று
இனவாத, மதவாத
தீவிர வாதப் பேய்களிடம்
அடிமைப்பட்டு கிடக்கிறது.

ஆளுக்கொரு கைபேசி ,
அனுதினமும் கேளிக்கை!
வீடெங்கும் தொலைக்காட்சி!
வினாடிதோறும் நெடுந்தொடர்கள் !
நகரத்து வெளிச்சக் கீற்றுகள்
இன்னும் வந்தடையா கிராமங்கள்
இன்னும்புழுதி போர்வையில்தான்
புரண்டு கொண்டிருக்கின்றன !

"கிராமங்களில்தான் இருக்கிறது
இந்திய பொருளாதாரம்!" -என்ற
சத்திய வார்த்தைகள்
காற்றில் கரைந்துவிட்ட பின் -இந்த
கிராமங்களை மீட்டெடுக்க
இன்னொரு காந்தி என்று
வருவாரோ?

அன்றுதான் நமக்கு
சுதந்திர வெளிச்சம்!
நடு ராத்திரியில் அல்லவா வந்தது
நமக்கு சுதந்திரம்?
அதனால்தானோ என்னவோ -இன்னும்
இருளில் மூழ்கி கிடக்கிறோம்?

-"ராம்கோ" மாரிமுத்து, அரியலூர்.

 

 

 

 

 

m

 

"ராம்கோ" மாரிமுத்து அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.