........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 532

நான் ரொம்ப பிசி...!

நாள் முழுக்க சமூக வலைத்தளங்களில்
நுழைந்து இருப்போம் !
இரவு பகல் எப்போதும்
சாட்டிங் செய்வோம்!
ஆப்பிரிக்க நண்பனை
சாப்பிட்டாச்சா என்று வினவுவோம் !
அயர்லாந்து காரனிடம்
ரோபோ படம் பற்றி பேசுவோம்!
கிரிக்கெட் மாட்சில் கோட்டை விட்ட
கேட்சு பற்றி டுவிட்டரில் கதைப்போம்!
ஆனால்-
இங்கே கிராமத்தில் தன்னந்தனியாய்
புகை அடுப்போடு போராடும்
அம்மாவுக்கு ஒரு கடிதம் போட
அவகாசமில்லை!
ஏன்னா, நான் ரொம்ப பிசி!

-ராம்கோ மாரிமுத்து.

 

 

 

 

 

m

 

"ராம்கோ" மாரிமுத்து அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.