........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 553

ஒற்றை ரோஜா...!

ரோஜாக் கூட்ட நடுவிலமர்ந்த
ராஜாவைத் தேடும் ராணியே!
காதல் வரம் தந்தெனை
கவிஞனாக்கிய வீணையிலா வாணியே!

கண்களால் வடம் பூட்டி
மனத்தேரை இழுக்கிறாய்!
பெண்மையின் உயர்வைப் பேசி
வானம் அளக்கிறாய்!

வானவாசலில் நீயிட்ட
புள்ளிகள் நட்சத்திரம்!
வானத் தூரிகையில் நீ
வரைந்த ஓவியம் வானவில்!

நீ உடுத்தும் சேலையிலும்
பூக்கள் பூக்குது!
நீ சூடுவதால் மலர்களில்
வாசம் சேருது!

ஒரு பார்வையில் விதைக்கிறாய்
ஒரு பார்வையில் வதைக்கிறாய்
தெருப்பாடகனாய் சுற்றவிட்டு
காதல் போதை ஊட்டினாய்!

காதலுக்கு முன்பு என்
மனதில் கற்ற ரோஜா!
காதல் தேவதை உனைக்
கண்ட பிறகு நீ மட்டும்
ஒற்றை ரோஜாவாய்....!

-விஷ்ணுதாசன்.

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.