........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 558

தவம்

அவசரங்கள் கடந்து போகின்றன.
நிழல்கள் விடைபெறுகின்றன.
தேவைகள் மட்டும்
அவ்வப்போது
நலம் விசாரிக்கின்றன.
வெறுப்புகளின் புன்சிரிப்புகள்
உரசிச் செல்கின்றன.
ஏக்கங்கள் திடீரென்று
முளைத்துப்
பின்பு அதேவேகத்தில்
மறைகின்றன.
பொறாமை கைகுலுக்கும்போது
கை சற்று அதிகமாகவே
வலித்து விடுகின்றது.
அன்பின் தூறல்கள்
லேசாக சன்னல் வழியே!.........
நிராகரிப்புக் கண்டு
நொறுங்கும்
பூக்களின் துடிதுடிப்பு.
எல்லாம் அறிந்தும்
அமைதியின் தவத்தில்
சாலையோர மரம்.

- முனைவர். வி.தேன்மொழி.

 

 

 

 

 

m

 

முனைவர். வி.தேன்மொழி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு