........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 559

நாய்க்குட்டி

அடிப்பதற் கென்றே
அப்பா..
திட்டுவதற் கென்றே
அம்மா..
சண்டை போடுவதற் கென்றே
அண்ணன்..
கோள் சொல்வதற் கென்றே
அக்கா..
புத்தி சொல்வதற் கென்றே
தாத்தா..
பழங்கதை பேசுவதற் கென்றே
பாட்டி..
தலையில் குட்டுவதற் கென்றே
வந்து போகும் மாமா..
படிக்க விடாமல்
பட்டம் விட
கூட்டிச் செல்லும்
பக்கத்து வீட்டு பாபு..
வாங்கிய குறைந்த மார்க்கை
நாலு பேர் முன்னால்
நாசூக்காய் போட்டுடைக்கும்
எதிர் வீட்டு
வகுப்புத் தோழன்..
இவர்கள் மத்தியில்
காலைச் சுற்றியும்
வாலை ஆட்டியும்
நாவால் நக்கியும்
அன்பைப் பொழியும்
அடுத்த வீட்டு
நாய்க் குட்டி...!
- பாளை. சுசி.

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு