........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 560

தாய்...!

குப்பை மேட்டில்
ஏறி நின்ற சேவற்கோழி
கொக்கரித்துக் கூவியது
நான் தான்
எவரெஸ்ட் ஏறிய
டென்சிங் எனறு...

பள்ளிவாசல்
பிறை மேல் அமர்ந்த
சிட்டுக் குருவி
சிறகு சிலிர்த்துச் சொன்னது
நான் தான்
சந்திரனில் கால் வைத்த
ஆம்ஸ்ட்ராங் என்று...

தும்பி வாலில்
நூல் கட்டி
ஆகாயத்தில் பறக்க விட்ட
என் தம்பி சொன்னான்
அவன் தான்
விமானம் கண்டு பிடித்த
ரைட் சகோதரன் என்று...

தெருக்கோடி சொரிநாய்
உறுமலுக்குப் பயந்து
தலை தெறிக்க ஓடிவந்த
என் தங்கை
மூச்சிறைக்கச் சொன்னாள்
அவள் தான்
பி.டி.உஷா என்று...

இவர்கள் நடுவில்
காலை முதல் மாலை வரை
கடுமையான வெயிலில்
கால் கடுக்க காத்து நின்று
லாரி தண்ணீர்
கால் குடம் பிடித்து
களைப்புடன் வீடு திரும்பும்
என் தாயை
யார் என்று சொல்வது..?

நீர் சுமக்கும் நதியை
’தாய்’ என்பது தானே
தமிழன் மரபு?

- பாளை. சுசி.

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு