........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 561

பூமியின் புலம்பல்!

மனிதா...
நான் பொறுமை சாலி என்பதாலா
என்னைத் தாய் என தத்தெடுத்தாய்
உதவாத பொருளுக்கு என் அங்கத்தை
ஒப்பிடுகிறாயே
உன் நாக்கில் நரம்புள்ளதா?

மண் என அங்கத்தை அடிக்கடி
கீழ்த்தரமான செயலுக்கு சொல்கிறாயே
உலகில் உயிருடன் வாழ்வது - நீ
என்னால்தான்

நான் உன்னை அரவணைப்பதும்
அள்ளி அணைப்பதும்
உன்கையில் தானடா இருக்கிறது மகனே
இப்போதும் கூட நான்
உன் பூமித்தாய்தான்

கனத்துக்கொருமுறை
நஞ்சு ஊடடுகிறாய்
நான் செத்துக் கொண்டே
உனக்கு உணவளிக்கிறேன்
என்னைப்பற்றிக் கவலைப்பட்டாயா?
எனக்குத்தான் நீ அதிகளவு
அறுவை சிகிச்சை செய்கின்றாய்
அர்த்தமில்லாமல்

விஞ்ஞானத்தால் என்னை
அஞ்ஞானம் செய்கின்றாயே
என்னிடம் இனி இழக்க ஒன்றுமில்லை
ஈர்ப்பைத் தவிர
நீ என்னை மதிக்காது மிதித்தால்
உன் விஞ்ஞானம் தான் ஈர்ப்புக்கும்
ஓர் கருவி செய்ய வேண்டும்?

- கிருஷ்ணா, யாழ்ப்பாணம்.

 

 

 

 

 

m

 

கிருஷ்ணா அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு