........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 562

சுமைதாங்கி!

மலர்களின் வாசம் ஏற்று வரும்
காற்றும் சுமைதாங்கிதான்!
நிலமகள் மகிழ மழை தாங்கி வரும்
கருமேகக் கூட்டமும் சுமைதாங்கிதான்!
கருத்துக்களை தன்னகத்தே கொண்ட
கவிதைகளும் சுமைதாங்கிதான்!
அரும் மருத்துவ மூலிகைகளை
அடித்துவரும் அருவியும் சுமைதாங்கிதான்!
அகழ்வாரைத் தாங்கும் நிலமும் நம்மை
சுமந்து பெற்ற தாயும் சுமைதாங்கிதான்!
கடவுள் மேல் பாரம் போட்டுவிட்டு நம்
கடமையை செய்யும் போது
கடவுளும் சுமைதாங்கிதான்!!

- சா.துவாரகைவாசன்.

 

 

 

 

 

m

 

சா.துவாரகை வாசன் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு