........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 563

பட்டுப்புடவை!

ஆசை ஆசையாய்
வாங்கிய பட்டுப் புடவை.
கச்சிதமாய் மடித்து வைத்து
பாதுகாத்த காஞ்சிப் பட்டு.
தினம் தினம் பார்ப்பாள்
திருமணப் புடவை என்று.

பட்டு உடுத்தி
மீண்டும் மீண்டும்
தன்னையே பார்ப்பாள்
கண்ணாடி முன் நின்று.
பட்டுப் புடவை என்றால்
அவளுக்கு அவ்வளவு உசுரு.

பட்டுப் புடவையில்
பார்வதியாய் காட்சிதருவாள்.
யார் கண்ணு பட்டதோ
உசுருக்கு உசுரான புடவை
அவள் உசுருக்கே
பாசக்கயிறாய் மாறிவிட்டது?

- முனைவர்.கு.சிதம்பரம்.

 

 

 

 

 

m

 

முனைவர்.கு.சிதம்பரம் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு