........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 566

காணாத நீ...!

மேகத்தைத் தூதுவிட்டேன்
நீ நட்சத்திரங்களோடு
கலந்திருப்பாய்
என்று நினைத்து
காணவில்லை...

அலைகளை தூதுவிட்டேன்
நீ கடலில் முத்துக்களோடு
கலந்திருப்பாய்
என்று நினைத்து
காணவில்லை...

உன்
நினைவுகளை தூதுவிட்டேன்
நீ எங்கிருந்தாலும்
என்னிடம் வந்துவிடுவாய் !
என்று நினைத்து
காணவில்லை...

அன்பே
சுவாசிக்க மறந்தபோதுதான்
என் வலிகளை
உணர்ந்தேன்

நீ என்
இதயத்தில்தான்
இருக்கிறாய் என்று !

- த.சத்யா, இராஜபாளையம்.

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு