........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 567

மழை...!

ஆகாயத்தில்
கரிநாள்
கார்மேகங்கள் சூழ்ந்து
மத்தள‌ம் இடித்து
பிரியாவிடை கொடுத்து
மழைத்துளி ஒவ்வொன்றையும்
பூமிக்கு தாரை வார்த்தது...

எய்திய வேகத்தில்
மண்ணை அடையும்
துளிகள் அதனோடு
ஐக்கியமாகி வளம் சேர்த்தது...
கரிய ஒழுங்கைகளை
அடையும் துளிகள்
தாயின் கைவிட்டோடிய‌
குழந்தை தாயிடமே
மீண்டும் குதித்தோடுவது போல்
விழுந்த வேகத்தில்
வானைத் தொட
தெரிந்தும் தோல்வி அடைய
தலைதாழ்த்தி அமைதியாய்
கால்வாயை நாடுகின்றன...

சமுத்திரத்தில் மோட்சம்
அடைய அன்று
கதிரொளிகளால்
வானை அடைந்து
மீண்டும் மழைத்துளியாய்
மண்ணைச் சேர....!

- பிரதீபா,  புதுச்சேரி.

 

 

 

 

 

m

 

பிரதீபா அவர்களது இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு