........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 569

மரணத்தின் தேதி!

இத்தனை நாள் பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்...
இதயத்தின் பாகமெல்லாம்
தீ கருகிய வாசம்!

உன் மாற்றம் என்னுள்ளே
தீயள்ளிப் போடும்...
உன் நினைப்பு என் உயிரின்
அந்தம் வரை ஓடும்!

சுட்டெரிக்கும் சூரியன்
என் தோழனாய் மாறும்!
என் நிலை கண்டுதான்
கலங்கி நீளும் ஆறும்!

வீணை தடவிய விரல்களெல்லாம்
கண்ணைக்குத்தி நிற்கும்..
வானைத்தொடும் கவலைகள்
முட்டும் எட்டுத்திக்கும்!

பட்டப் பகல் வெட்ட வெயில்
துன்பமில்லை எனக்கு - கை
தொட்ட அவள் வெப்பம் நெஞ்சில்
பத்திரமாய் இருக்கு!

ஏமாற்றம் வலியெல்லாம்
எனக்குள்ளே மோதி...
சீக்கிரமாய் நிர்ணயிக்கும்
என் மரணத்தின் தேதி!!!

- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா,
இலங்கை.
 

 

 

 

 

 

m

 

தியத்தலாவா எச்.எப்.ரிஸ்னா அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு