........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 581

மாலை வேளை!

மாலை வேளைக் கதிரவன்
தன் வெம்மைக் கதிர்களை
குளிரூட்டி
கடுமை தணித்து
கால வண்டியில் ஏறி
மேற்றிசை நோக்கி
மெல்ல மெல்ல
பயணிக்கிறான்... ... ...

விவசாயி
விளை நிலத்தில்
வியர்வை சிந்தி
பாடுபட்டதன் பின்
பலன் கிடைக்கும்
என்ற நம்பிக்கை
ஒளியுடன்
இல்லத்துக்கு
விரைந்திட
மாலைக் கதிரவனின்
கால வண்டியின் பின்னால்
களிப்புடன்
கால்களை எட்டி வைக்கின்றான்

மாலை வேளை கடலலை
மோத
தோணிகள் உலாவுவதை
கண்டு களித்தவர்கள்
மாலைக்கதிரவன்
மறைய... முன்
வீடுகளுக்கு விரைந்தனரே!

-கலாபூஷணம் எம். வை. எம். மீஆத், தும்புளுவாவை, இலங்கை.

 

 

 

 

 

 

 

m

 

கலாபூஷணம் எம்.வை.எம்.மீஆத் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு