........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 591

காதல் செய்வோம் வா...!

கையுடன் கைகோர்த்து
என்னை அழைத்துச் சென்று
சொல்லிவிடு...
என்னவெல்லாம்
பேச நினைத்தாயோ
அவை அத்தனையும்!

என் காதோர‌ம் நெருங்கி வா
மென்மையாக‌ச் சொல்லிவிடு...
நான் கேட்க‌ விரும்பும்
அனைத்தையும்!

என்னைத் தொடு
என் இத‌ழ்க‌ளை சுவைத்திடு
என்னுள் ஆழ‌மாக இருக்கும்
உண‌ர்வுக‌ளை வெளியேற்றிடு!

காற்றுக்கூட‌ புகுந்திட‌ முடியாதள‌வில்
இருவ‌ருக்கும் நெருக்க‌த்தை ஏற்ப‌டுத்து....
என்னை உன் வசப்படுத்தி
என் ப‌ய‌த்தினையும்
வ‌லியினையும் எடுத்துக்கொள்!
அந்நொடிகளில்
தோன்றி மறையும்
என் வெட்கங்க‌ளில்
உயிர்த்திடு!

என்னுடைய‌ இர‌வுக‌ளில்
ப‌க்க‌மிருந்து
வெளிச்ச‌ம் கொடு!
என் பக‌ல்க‌ளில்
நீ ஒருவ‌ன் ம‌ட்டுமே
என‌க்காக‌ என்ப‌தை காட்டிடு!

தடைகளைத் தகர்த்து
என் இதயத்தில் நுழைந்திடு!
நீ என்னுள் இருக்கும்
தருணத்தை பார்க்கும் நேரமிது!

உன்னுள் சிறைப்பட்டிருக்கும்
என்னை இன்னும் தெரியவில்லையா...
என் விலங்குகளை உடைத்து
விடுதலை தந்துவிடு!

மனதின் ஆழத்தில் இருக்கும்
என்னை வெளிக்கொண்டு வந்திடு
இப்பொழுது நான் தயாராக இருக்கிறேன்
காதல் செய்வோம் வா!

-பிரியா.

 

 

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு