........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 600

இன்று விடுமுறை!

அலாரம் வைத்து
அதிகாலை எழுந்து
அரக்கப் பறக்க குளித்து
கைக்கெட்டிய துணியால்
மேனி மறைத்து
தலை சீவி
பவுடர் போட்டு
அடுக்களை நுழைந்து
காலை டிபனை
கட கட உண்டு
மதிய உணவை
பார்சல் கட்டி
சில்லறை பொறுக்கி
சில நோட்டுகள் எடுத்து
சடுதியில் வந்து
சந்தியில் நின்று
வந்த பஸ்ஸில்
வாசலில் நின்று
வசைச் சொல் கேட்டு
அழுந்தி நுழைந்து
உள்ளே புகுந்து
இடி பட்டு
மிதி பட்டு
இறங்கும் போது
செருப்பறுந்து
சிறு நடையாய்
சிரமத்தோடு
கல்லூரிக்குள்
காலடி வைத்தால்
காட்சி தரும்
கரும் பலகையில்
“இன்று விடுமுறை!”

-பாளை.சுசி      

 

 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு