........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 606

உன் கனவிலாவது... என்னை!

உன் ரெட்டை பாதம் மெல்ல நடந்து
என் இதயம் ஏறிப் போகுதடி -
உன் விரலில் வீழும் மனதை படிக்க
கண்கள்; கடிதம் நூறு தேடுதடி!

உன் குறுக்கே சிவந்த இடுப்பை கிள்ள
ஒற்றை தாலி வேணுமடி -
உன் உதட்டில் ஈரக் கவிதை பதிக்க
வலது காலில் வாசல் மிறி!

இடது காலும் இழுக்கா என்ன
என் நெஞ்சில் ஏறி நின்னுக்கடி -
உன் கற்றை முடியில் காதல் பறிக்க
வெப்பக் காற்றாய் மாறிக்கடி!

குண்டு மல்லி கண்களி லென்னை
ஓரப் பார்வையாய் சேர்த்துக்கடி -
தினம் தேடித் படிக்கும் கவிதை போல
என்னை - மெல்லக்காதல் செய்துக்கடி!

வஞ்சனை இன்றி வார்த்தை நூறு
இதயம் முழுக்க தேடி பிடி -
இனியும் இப்படி முரண்டு பிடித்தால்
அடியே போறவளே சற்று நில்லேண்டி -

என் இதயம் ஒன்றில் ஏறிநின்று -
உன் கனவை மொத்தமாய் தீர்த்துக்கடி;
என் வாழ்வின் நிஜமாய் வந்து உதித்து
நீயே நானாய் மாறிக்கடி;
உந்தன் கனவிலாவதென்னைச் சேர்த்துக்கடி!!

- வித்யாசாகர்.    

 

 

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு