........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 607

நோவதைத் தவிர...!

நானென்ற மமதைக்கோர் குட்டுப் போடும்
ஆண்டவனை நாடியோட வைக்கும்
தன்னம்பிக்கைக்குத் தடைபோடும்
தைரியத்தைத் தட்டிக் கேட்கும்
துணைதேடி உடல் துடிக்கும்
அமைதி தேடி ஒதுங்க வைக்கும்
''ஆ" வென்ற மொழியை நாவுக்குப் பழக்கமாக்கும்
வாழவேண்டுமெனும் ஆசையை அழிக்கும்
கூடவிருந்தே குழி பறிக்கும் - இந்நோய்
மனிதனுக்கோர் எச்சரிக்கை
விஞ்ஞானி மூளைக்கு எஜமானி
வாழ்வின் தத்துவம் உணர்த்தும் ஞானி
வாழ்பவரை அணைப்பதே இதன் பாணி - இது
வாட்டாதவர் யாருமில்லை
வருந்தாதவர் எவருமில்லை
நோயே! உன்னையெண்ணி
நோவதைத் தவிர வேறு வழியில்லை.

- சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி.    

 

 

 

 

 

 

 

m

 

சந்திரகௌரி சிவபாலன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு