........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 608

பெண்ணியம்?

'சுதந்திரம்'
இந்த
ஒற்றை வார்த்தையின்
ஆழமான தேடலில்
நிழலாய்த் தேய்கிறது
வாழ்க்கை.

அடுப்பங்கரையின் ஓரத்தில்
பட்டுத்தெரித்த அனலில்
வெதும்பியது நெஞ்சம்.
விசும்பிய விழிகளின் ஓரத்தில்
லேசாக
நம்பிக்கைத் தீறல்.

'நாளை விடியும்'
என்ற
நம்பிக்கை முனை
நோக்கிய பயணத்தில்
நடைபோடுகிறது நாட்கள்.

திண்ணையில்
புதிதாய் வாங்கிய
தொலைக்காட்சி
பாங்காய்ப் பகர்கிறது
பெண்கள் முன்னேற்றத்தை.

தொலைக்காட்சி
வந்துவிட்டது
திண்ணைக்கு
பெண்ணியம்
எப்போது வரும்
வீட்டுக்குள்?

- முனைவர்.வி.தேன்மொழி, சிங்கப்பூர்.    

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். வி.தேன்மொழி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு