........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 637

படைப்புகள்!

எனது எழுதுகோல் செதுக்கிய சிற்பங்கள்
கணனித் துணையுடன் பிரசவித்த குழந்தை
இணையங்கள் அணைத்த வாரிசு
இனிப்புத் தடவாத எலுமிச்சை
மகரந்தம் சிறிதளவே சிந்துகின்ற மலர்
உருண்டு கொண்டிருக்கும் பூமியிலே
சிரித்துக் கொண்டிருக்கும் சின்னக்கரு
என் அநுபவத்தைப் பிறருக்குக்
காட்டுகின்ற புகைப்படம்
பிறர் என்னை நேசிக்கத் துணைப் போகும்
இணைப்போலை
என் மனதில் தொடராய் ஊற்றெடுக்கும்
எண்ண அருவி
பதிக்கின்ற இடமெல்லாம் - என்
பண்பான இதயம் படிந்திருக்கும்
என்னைப் பாதித்தவை பல
என்னுள் பதிந்தவை சில
நீர்க் குமிழி போல் மறைந்தவை இன்னும் சில
யாப்பையுடைத்து வெளிவந்தவை சிற்சில
என் மனச்செடிக்குள் பூத்தாலும்
மாற்றான் பயன் பெறப் பூக்கும் ரோஜா!

-சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி.

 

 

 

 

 

 

 

m

 

சந்திரகௌரி சிவபாலன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு