........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 638

நன்கொடை!

அமிழ்தத்தில் சரியளவு
நச்சுக் கலந்து
அருந்தியவன் நிலையில்
அருந்தமிழ் இன்று.
வெகுசன ஊடகமாம்
தமிழ்த்திரை உலகில்
பல்லி விழுந்த
பாலைப் போல
பாடல்கள் பல.
வீரிய தமிழில்
கலப்படம் செய்து
வியாபாரம் செய்யும்
கவி மேதாவிகளே!
உங்களின்
கலப்படத்தால்
காயப்படப் போவது
மொழி மட்டுமல்ல - நன்
இனமும்தான்.
ஏனெனில் “மொழி”
இனத்தின் அடையாளம்.
மொழியில் கலப்படம்
மொழிவளர்ச்சிக்கு வேகத்தடை!
கலப்படம் தவிர்த்தலே
மொழிக்கு செய்யும் நன்கொடை!!

-உ.நா. குடிக்காடு சி.கருணாகரசு.

 

 

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு