|
கவிதை: 639
மரம் வளர்ப்போம்!

தாய் மடி
சூடு
தாங்காமல்
சேய் கூட
அழுதிடும் !
இந்த
பூமிப்பந்து
கனல் சூடு
தாங்காமல்
அழிந்திடுவளோ !!
தீயின் நாவில்
தீமை
அழியட்டும் !
வெப்பத்தின்
சாவில்
மனிதன் வாழட்டும் !!
"தமிழ் இனி
மெல்ல சாகும்" - இது
பாரதியின் வாக்கு !
மனித
அலட்சியத்தால்
"புவி இனி
மெல்ல சாகும்" - இது
என்னுடைய வாக்கு !!
பனிப்பொழிவால்
ஆடை உடுத்தி
அழகு நங்கை
வாழ்ந்து வந்தாள்
என்
அன்னை - அவள்
வெப்பமெனும்
துட்சாதனன்
சிறுக சிறுக
பனிப்போர்வையை
துகிலுரிக்க கண்டேன்!
நம்
தாய் நிர்வாணம்
அடையுமுன்னே - போர்வை
ஒன்றை
தந்திடுவோம்!!
பச்சைபசேல்
என
சேலை ஒன்றை
நெய்திடுவோம்!!
"மரக்கன்று" - இது
நம் மானம்
காக்கும் ஆடை அன்றோ !
"மரக்கன்று" - இது
நாம் வாழும்
வாழ்வின் அடையாளமன்றோ !!
இந்த
பூமிப்பந்தை
தாய் போல்
காத்திடுவோம்!
வரப்பு சண்டை
வாய்க்கால் சண்டை
எல்லையில் சண்டை - என
வறட்டு சண்டை
போதும் !!
ஒன்றுபட்டு
ஒழித்துடுவோம் - புது
வழியை நாமும்
கண்டிடுவோம்!
பச்சை ஆடை
உடுத்திட
பலப்பல மரக்கன்று
நடவேண்டும் !
மரம் வெட்டும்
மனிதனை
பல மாதம்
பாலை மணலில்
விட வேண்டும் !!
மரச்சோலை
எங்கும் வரவேண்டும் !
மரம் சாலை
எங்கும் நடவேண்டும் !!
-பி.ராஜா, சேலம்.
|
|