........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 640

நாகரீக வாழ்க்கை...?

தொலைக்காட்சியில் மூழ்கிய
தருணங்களில் சரியான
கவனிப்பில்லாமல் விடப்படுகின்றன...!

பால்காரன் அழைப்பு மணி சத்தம்,
பள்ளி சென்று திரும்பிய
பாலர் வகுப்புக் குழந்தையின் பசி,
மாமனாரின் மாலை நேரத் தேநீர்,
கணவனின் அலுவலக
அலைச்சலின் சிறிய பரிமாற்றம்,
செல்லப் பிராணியின் எஜமான் தேடல்,
மங்கத் தொடங்கும் சூரியனின்
செந்நிற வானம்,
புத்தகம் திறக்கும் பள்ளிக் குழந்தையின்
சின்னச்சின்ன சந்தேகங்கள்,
தினம்தோறும் மாலையில்
வெளிவரும் சூடான செய்திகள்,
புத்தகக் கண்காட்சியில் புதியதாய்
வாங்கிய புத்தகங்கள்,
என அடுத்த தொடருக்கு
அழைத்துச் செல்லப்படுகிறது...!

நவீனக் குடும்பப் பெண்களின்
நாகரீக வாழ்க்கை...?

- ராசை நேத்திரன்.

 

 

 

 

 

 

 

m

 

ராசை நேத்திரன் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு