........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 650

விரட்டி இருக்க வேண்டாமா?

மட்டைப் பந்து ஆட்டத்தை -மும்பை
மண்ணில் காணும் நாட்டத்தில்
திட்ட மிட்டே வந்தானா - பக்சே
திடீர் வரவு தந்தானா
சட்டைக் கிழிய அடிக்காமல் - நல்
சவுக்கால் உடலை சொடுக்காமல்
விட்டதே போதும் என்றோட - அவனை
விரட்டி இருக்க வேண்டாமா?

மண்ணின் மைந்தரே மராட்டியரே - சிவாஜி
மரபில் வந்த தீரர்களே
எண்ணிப் பாரும் வந்ததெவன் - நெஞ்சில்
இரக்க மில்லா அரக்கனவன்
புண்ணைக் கிளறி இரணமாக்கி - வந்து
போனான் பக்சே புறம்போக்கி
கண்ணில் இனிமேல் நீர்கண்டால் - முகத்தில
காறித் துப்ப மறவாதீர்!

ஏகம் இந்தியா எனப்பேசி - இனியும்
இருப்பது கற்பனை மனங்கூசி
வேகம் காட்ட முனைவோமா - அதுவே
விவேகம் என்றதைக் கொள்வோமா
தாகம் தணிக்க தண்ணீரும - சிங்களர்
தந்தால் உண்டாம் கண்ணீரும்
சோகம் காட்டும் வார்ப்படமாய் - ஈழ
சோதரர் வாழ்வது திரைப்படமா?

ஒன்றா இரண்டா உரைப்பதற்கே - தமிழ்
உணர்வே இன்றெனில் நாமெதற்கே
நன்றா இதுதான் தமிழ்நாடே - இப்படி
நடந்தால் உனக்கது பெருங்கேடே
குன்றாய் உறுதி நீ கொண்டே - ஈழம்
கொடுத்திட ஏற்ற வழி கண்டே
நின்றால் துணையாய் தரும்வெற்றி - உலகில்
நிலைத்து நிற்கும் நம்வெற்றி!!

-புலவர் சா. இராமாநுசம், சென்னை-24.

 

 

 

 

 

 

 

m

 

புலவர் சா. இராமாநுசம் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு