........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 695

நிசங்களைத் தேடி...!

பிறப்பு, வாழ்வு, இறப்பு நிசமானால்
அறுப்பவை அதர்மமின்றி அமைத்தல் நிசம்.
பொறுப்புணர்வு பொன். அது கைவசமானால்,
சிறப்போடொரு நல் மனிதனாவது நிசம்.

காணி, வீடு தோட்டம், துரவு
ஆணியடித்த நிசமென்ற நம்பிக்கை
தோணி கவிழ்த்ததாய் ஆனது போரினால்.
நாணித் தலை குனியும் நிலையுமானது.

அடக்கு முறைகள், அகங்காரத்துள் அசையும்
அவனி வாழ்வில் சுயநலங்கள் நிசம்.
ஆத்ம பலம், உடல் ஆரோக்கியம், எம்
ஆளுமைத் திறமை உறுதியான நிசம்.

உலகைத் தலையில் ஏந்துவதாய்ச் சிலர்
கலகம் பண்ணுவதில் இல்லை நிசம்.
திலகம் வைப்பதாய்ச் செய்யும் செயல்கள்
நலமாய் அமைதலே நிலத்திலூன்றும் செயல்.

கம்பன் இலக்கியத்தில் கொடி யேற்றினான்
கருணையற்ற கிட்லர் இம்சையில் நிலைத்தான்.
காந்தி அகிம்சைப் போரில் நிசமானார்.
கவிதையில் பாரதி நிலைக்கின்றார் நிசம்.

கவிதையில் நானிதை வரைகிறேன் நிசம்.
கரைகாணாத் துரும்பாய் அலைவதும் நிசம்.
காசினியில் காவும் உடலது அழியும் வரை
கட்டியெழுப்பும் நன்மை தீமைகளே நிசம்.!

-வேதா இலங்காதிலகம், குஸ், டென்மார்க்.

 

 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு