........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 728

குறுங்கவிதைகள்!

முரண்

ஆசிரியரின் பாடம்
ஆறுவது சினமாம்
அடியோ மாணவனுக்கு

திருப்தி

ரோஜாவில் முள்ளா?
இல்லை! இல்லை!
முள்ளில் தானே ரோஜா!

விளைவு

கால்களும் சோர்ந்தன
கைகளும் சோர்ந்தன
அடக் கூலியுமா?

வேதனை

அன்னதானம் பற்றி
அரைமணி நேரம் பேச்சு
தலைவரோ கஞ்சம்!

எப்போது விடிவு?

வானில் நிலா
பூமியில் வெளிச்சம்
குடிசைக்குள் இருட்டு!

-முனைவர். மா.  தியாகராஜன், சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு